வைராக்கிய தியானங்கள் 

 ஞானிகளின் பாடங்கள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்தடையும் 

தினமும் 1 ரூபாய் - வருட சந்தா ரூபாய் 390/-

ஆங்கிலம் - தமிழ் இரண்டு மொழிகளில்

வைராக்கிய தியானங்கள்

மின்னஞ்சல் மூலம் ஞானிகளின் மனதையும் சக்தி நிலையையும் ஒருநிலை படுத்தும் தியான பாடங்கள் 

தினமும் - 365 நாட்களுக்கு 

வருட சந்தா ருபாய் 390/- மட்டுமே 

தினம் ஒரு ரூபாய் .


தாரணத்திற்கு பின் தியானம் - தியான நிலை 

தியானம் முயற்சிசெய்து வராது. தினசரி வைராக்கிய தியானங்கள் தியானத்திற்கான சூழலை உருவாக்கும்

 ஒரு பொருளின் மேல் அல்லது ஒரு தத்துவ பிரதிபலிப்பின் மேல் முழு ஈடுபாடுடன் மனதை வைப்பது தாரணம். சிறிது நேரத்திற்கு பின் தியான நிலை உருவாகும்.தியான நிலையுடன் இருந்துகொண்டு நாம் செய்யும் வேலையையும், கவனச்சிதர்வின்றி, முழு ஈடுபாட்டுடன்  செய்யலாம். வேலையின் தரம் கூடும் . வாழ்க்கையே தியானம் ஆகிவிடும் .

மகரிஷி பதஞ்சலி

மனதை நிலைநிறுத்த, சூழலை தொடர்ச்சியாக ஒருவாக்கிக்கொண்டிருக்கும் பயிற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தால் - மனம் நிலை பெரும் - வெற்றி கிடைக்கும்.

நமது சான்றோர்கள் மனதை நிலைப்படுத்தி , ஒரு திசையில் செலுத்த பல யுக்திகளை கொடுத்திருக்கிறார்கள். கதைகள் , பிரதிபலிப்புகள் மூலம் ஆழ்மனதை ஈர்த்து , ஒருநிலை படுத்தும் தியானங்கள். 

படிப்படியாக ஆழப்படுத்தும் தன்மையுடன் வரிசை படுத்தப்பட்டு  , தினமும் காலை உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்படும்

தினமும் உங்கள் தினத்தை வைராக்கிய தியானத்துடன் தொடங்குங்கள் .

Vairaagya Meditations 

Daily meditation lessons are available in English also. Please click on this section if you need the lessons in English. You can know more and register for the course

யோகா மற்றும் தினசரி தியான பயிற்சியில் ஈடுபடும் தொழிலதிபர்கள் மற்றும் பணக்காரர்கள்

1. திரு . ரத்தன் டாடா

 2. திரு . ரஜ்ஜீவ் பஜாஜ் ( பஜாஜ் கம்பெனியின் நிறுவனர் )

3. திரு. சுனில் பாரதி மிட்டல் ( ஏர்டெல் நிறுவன நிர்வர் )

4. திரு. கி.ம். ராவ் ( ஜி ம் ர் - நிறுவனர் )

5. திரு. ஆனந்த் அம்பானி ( ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் மைந்தர்)

https://timesofindia.indiatimes.com/business/india-business/international-yoga-day-ceos-whore-into-the-ancient-science/articleshow/59250754.cms



மன ஒருங்கிணைப்பு - சக்திநிலை ஒருங்கிணைப்பு 

வாரன் பபெட் ( பங்கு சந்தையில் முதலீடு செய்து பணக்காரரானவர் )

 ஸ்டீவ் ஜாப்ஸ் ( ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்)

 பில் போர்ட் ( போர்ட் நிறுவனத்தின் முதலாளர்)

 கூகிள் நிறுவனம்  மன ஒருங்கிணைப்பு பயிற்சிகளை தங்கள் ஊழியர்களுக்கு அளிக்கிறது

வைராக்யா - ஆன்மிக வளர்ச்சியின் ஒரு குறியீடு 

வெளி சூழலில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து , உணர்விலோ எண்ணத்தின் சுழற்சியிலோ சிக்காமல் , உள்ளுணர்வுடன் குறிக்கோளை அடைய, தெளிவான சிந்தனையுடன் செயல்படும் திறன் 

தியானங்கள்  பிரதிபலிப்புகள்

வைராக்யா 

ஒருங்கிணைந்த மன நிலை 

சக்தி நிலையில் ஆளுமை                         

எண்ணங்கள் குறைதல்  

வாழ்வில், செயலில்  தெளிவு 


உணர்வுநிலையில் நிதானம்


பொருளீட்டும் திறன் அதிகரிப்பு

சரியான சூழலை ஏற்படுத்தினால் தியானம் தானாகவே நடக்கும் 

செய்யும் தொழிலையும் , வாழ்க்கையையும் தியானமாக்கி விட்டால் - பிரபஞ்ச சக்தி  ஒருவர் மூலம் செயல்படும் . வருட சந்தா ரூபாய் 390/-

ஒரு முதற்கட்ட அனுபவம்.  நீங்கள் பதிவு செய்தவுடன் உங்களுக்கு கிடைக்கக்கூடிய முதல் தியானமுறை பாடம்

நிறங்கள் உங்கள் கண்களை குருடாக்கும் -

ஸ்வரங்கள் - 

உங்கள் செவிகளை செவிடாகிவிடும்

தாவோ 

ஒரு இலையை பார்க்கிறேன். என்னுள் என்ன எண்ணங்கள்.உதயமாகின்றன?

எண்ணங்கள் உதயமானவுடன் இலையுடன் எஎன்னென்ன ன் செயல்பாடுகள் எப்படி மாறுபடுகிறது?

என் செயல்பாடுகளின் ஆதாரம் நான் பார்க்கும் இலையின் மீதிலிருந்தா அல்லது என் எண்ணம் என் மீது ஏற்படுத்திய தாக்கத்திலிருந்தா ?

நான் ஒருவரை பார்க்கும் பொழுது என்னென்ன எண்ணங்கள் , உணர்வுகள் தூண்டப்படுகின்றன ?

அப்படி தூண்டப்பட்ட பின் , நான் அவருடன் பேசும்பொழுது அவருடன் பேசுகின்றேனா - இல்லை அவர் என் மீது ஏற்படுத்திய தாக்கத்தின் பிரதிபலிப்புகளுடன் பேசுகின்றேனா ?

என் எண்ணங்கள், உணர்வுகளின் ஆரம்பம் மற்றும் மூலம் பழைய பதிவுகளில் இருந்து ஏற்படும் பொழுது நான் புதியதை உருவாக்குகின்றேனா இல்லை என்னுடைய பழைய வாழ்க்கையை மீண்டும் மீண்டும் ஒருவாக்குகின்றேனா ?

நான் பார்க்கிறேன் கேட்கிறேன் என்றால் என் முன் என்ன இருக்கிறதோ அதை மட்டுமல்லவா பார்க்கவேண்டும். 

கண்களால் எனக்கு வெளியில் தெரிவதை பார்த்து , என் மனதில் தூண்டப்படும் நினைவுகளுக்கு நான் எதிர்செயல் செய்கிறேன் என்றால் கண்கள் எனக்கு பார்வை கொடுக்கிறதா அல்லது கண்கள் என்னை குருடாக்குகிறதா.

 வைராக்கியத்தின் முதல் பண்புகூரு - தெளிவு - உதயமாகும் பழைய எண்ணங்களின் பாதிப்பின்றி, என்  வெளி சூழலிலும் உள்  சூழலிலும் என்ன நடக்கிறதோ அதை அப்படியே கவனிக்கும் திறன்.

நான் என்னை பற்றியும், என் சூழலை பற்றியும்  முன்னர் எடுத்த முடிவுகள் அனைத்தையும் தள்ளிவைத்துவிட்டுட்டு , வாழ்க்கையை அணுகும் முறை.

ஒரு எளிய முறை, ஆரம்ப நிலை  பயிற்சி  உங்களுக்கு பரிச்சியமான ஒரு நபரின் புகை படத்தை பாருங்கள்.

என்னென்ன எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் வருகின்றன என்பதை பாருங்கள்.

நான் இந்த நபருடன் உறவாடும் பொழுது தூண்டப்படும் எண்ணங்களும் உணர்வுகளும், எங்கள் உறவை மேம்படுத்த உதவுகின்றதா அல்லது பாதிக்கின்றதா ?

இடையூறாக வரும் நினைவுகள் என் இலக்கை அடைய உதவுகின்றதா அல்லது இடையூறாக இருக்கின்றனவா ?

இலக்கை அடைய வேண்டும், அதுவும் சுலபமாக அடையவேண்டும் என்றால் ஒவ்வொரு நொடியும் என் உள் சூழலிலும் வெளி சூழலிலும் என்ன நடக்கிறது என்பதை துல்லியமாக கிரகிக்கும் தன்மையை உருவாக்க கற்க வேண்டும்.

சுதந்திரம் - பழையத்திலிருந்து விடுபடும் பொழுது அல்லவா ?

சுதந்திரம் - எனக்கு பிடித்ததை முழுமையாக உருவாக்கும் பொழுது அல்லவா ?

தினமும் இந்த பயிற்சியை ஐந்து நிமிடம் பயிலுங்கள்.

ஒரு பொருளை உங்கள் முன் வைத்து அந்த பொருளை மட்டும் பார்துக்கொண்டிருங்கள்.என்ன எண்ணங்கள் வருகின்றன?

எண்ணத்தை சற்று தள்ளிவிட்டு, பார்க்கும் பொருளை, உங்கள் மூச்சுக்காற்றின் கவனத்துடன் மட்டும் பாருங்கள்.

இந்த பயிற்சியை தினமும் ஐந்து நிமிடம் பயிலுங்கள்.வைராக்கிய தியானங்கள் - பதிவு செய்யுங்கள். தினமும் ஒரு தியானம் .

தியானங்களை வடிவமைத்து வழங்குபவர் 

சரவணன் 

உளவியல்  யோக விஞ்ஞானம் மேற்படிப்பு - சுவாமி சிவானந்தா யோக விஞ்ஞான பள்ளி , கிருஷ்ணமாச்சார்யா யோக முறை கல்வி

 25 வருட அனுபவம் - ஆழ் நிலை மனப்பயிற்சியாளர்

ஆழ்நிலை மனோதத்துவ நிபுணர் (ஹைப்னோதெரபி - Hypnotherapist)

YOga Therapist - யோக உளவியல் சிகிச்சை நிபுணர் 

முன் ஜென்ம பதிவவினால் பின்னடைவு அடையும் தன்மையை நடுநிலைப்படுத்தி - அதிலிருந்து தீர்வு தரும் பயிற்சிமுறைகள் - (Past Life Regression)

(+91-8754480667)


எங்கிருந்தாலும் என்ன செய்துகொண்டிருந்தாலும் 


மனதை நிலை நிறுத்திய ஞானிகளின் வழி  


உங்கள் தினசரி வாழ்விலும் தொழிலிலும் ஒருங்கிணையும் பயிற்சி பாடங்கள் 


தினமும் ஒரு தியானம் எதற்கு ?

ஞானிகளின் மகாவாக்கியங்கள் ஆழ்மனதை ஈர்த்து கட்டுண்டுண்டு வைக்கும். படிப்படியாக மனதின் மீது ஒரு ஆளுமை உண்டாகும்.

எங்கும் - எப்பொழுதும் - தியான நிலை 

தியானம் பயிற்சியாக துவங்கலாம் . தியான பயிற்சியின் நோக்கம் உயிர்சக்தியோடு இணைந்து வாழக்கற்றுக்கொள்வதே. விழித்துக்கொண்டிருக்கும் நிலையிலும் , உறங்கிக்கொண்டிருக்கும் நிலையிலும் தியானித்திருந்தால், வாழ்க்கை புதிய பரிமாணம் எடுக்கும் . தியானத்தை வழக்கப்படுத்திக்கொண்டால் தியான நிலை வாழ்வில் ஒரு அங்கமாகி விடும்.

சமஸ்க்ரித மந்திர பயிற்சியுடன் 

பைரவ தந்த்ரா தியானம்

இணையதள நேரலையில்


வாரமிருமுறை நேரலையில் பைரவ தந்த்ரா தியானங்களை,  சமஸ்க்ரித மந்திர பயிற்சியுடன் கற்றுக்கொள்ள ஆர்வமிருந்தால் நீங்கள் இங்கு பதிவு செய்யலாம்

முதல் மாத கட்டணம் - 1380 ( வைராக்கிய தியானத்திற்கான ஒரு வருட சந்தாவும் , பைரவ தந்த்ரா தியானம் - மந்திர பயிற்சிக்கான முதல் மாத கட்டணம் இரண்டும் உள்ளடங்கி)

இரண்டாம் மாதத்திலிருந்து - மாத கட்டணம் - 990/-

வகுப்புகள் புதன் - சனிக்கிழமை மாலை 6.45 - 8.00 (மாதத்திற்கு 8 வகுப்புகள்)

வகுப்புகள் பதிவு செய்யப்பட்டு, இணையதளத்தில் பகிரப்படும் .நீங்கள் வகுப்பை தவற விட்டுவிட்டால் - உங்கள் நேரத்திற்கு தகுந்தார் போல் பயிற்சி செய்துகொள்ளலாம் .